ருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறாவது வீடு சத்ரு ஸ்தானம், ரோக ஸ்தானம் எனப்படும். கடன் உபாதைகள், வியாதி, பகைவர்களின் தொல்லை, ராஜதண்டனை, சிறைப்படுதல், விரோதங்கள், விஷப்பீடைகள், திருட்டுப்போதல் போன்றவற்றை ஆறாம் வீட்டைக்கொண்டும், ஆறாவது வீட்டுக்குரிய கிரகத்தைக்கொண்டும் அறியலாம்.

Advertisment

லக்னத்துக்கு 6-ஆம் வீட்டுக்குரிய கிரகம் 1-ஆவது வீடாகிய லக்னத்திலேயே இருந்தால் எப்போதும் ஏதாவது நோயால் அல்லல்படுவர். தைரியமில்லாதவ ராக இருப்பர். எதிலும் பயம் ஏற்படும். பகைவர்களால் எப்போதும் தொல்லைகள் இருந்துகொண்டிருக்கும். இவர்கள் சர்வ ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். சுப பலம் பெற்றிருந்தால் பரிகாரம் செய்துகொண்டால் கஷ்டம் ஒருவாறாகக் குறையும்.

6-ஆவது வீட்டுக்குரிய கிரகம் 2-ஆம் வீட்டிலிருந்தால் வாக்கு வண்மை இருக்காது. ஸ்திரமான பேச்சு வராது. அதிகமாகக் கடன் வாங்கி செலவுசெய்வார்கள். அனாவசிய செலவுகள் ஏற்படும். கல்வியில் ஊக்கம் உண்டாகாது. கண் பார்வை மங்கியிருக்கும். குடும்பம் நாளுக்குநாள் நலி வடையும். பேச்சினால் விரோதம் ஏற்படும்.

6-ஆவது வீட்டுக்குரிய கிரகம் 3-ல் இருந்தால் சகோதர- சகோ தரிகள் விரோதிகளாகத் தெரிவார் கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவாது. கடன் வாங்கி உணவுண் பார்கள்.

Advertisment

6-ஆவது வீட்டுக்குரிய கிரகம் 4-ல் இருந்தால் தாயாருடைய உடல்நலம் பாதிக்கும். தாயாரே விரோதமாவார். குடும்பம் பூரண சௌக்கியங்களுடன் இருக்காது. நிலம், வீடுகள் இருந்தாலும் வருமானம் குறைந்திருக்கும். கடன் உபாதையினால் சொத்துகளை விற்க நேரும். அடமானம் வைக்கும் நிலை ஏற்படும். பொதுவாக சிரமமான வாழ்க்கையே வாழ் வார்கள்.

v

6-ஆவது வீட்டுக் குரிய கிரகம் 5-ல் இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும் அல்லது கடன், விரோதம், கஷ்டம் ஏற்படும். கெட்ட எண்ணங்கள் உருவாகும். பாவகாரியங்களைத் துணிந்து செய்பவர்களாகவும், பிறரை ஏமாற்றும் சக்தியுடனும் இருப்பார்கள். இதய நோய் இருக்கும்.

Advertisment

6-ஆவது வீட்டுக் குரிய கிரகம் 6-ல் தனது சொந்த வீட்டில் ஆட்சியாக இருந்தால் சத்ரு பயம் அதிகமாகும். கடன் தொல்லைகள் அதிகரிக்கும். வியாதிகள் ஏற்படும். கலகங்கள் செய்பவர்களாகவும், மனஸ்தாபத்தை உண்டாக்குபவர்களாகவும் இருப்பார்கள். ராஜதண்டனை, சிறைவாசம், வறுமை முதலானவற்றை அனுபவிக்கும்படி இருக்கும். சுபதிருஷ்டியுடன் இருப்பின் எதிரிகளா லேயே வெற்றி, நன்மை உண்டாகும்.

6-ஆவது வீட்டுக்குரிய கிரகம் 7-ல் இருந்தால், மனைவி, மனைவிவழியில் ஆதரவிருக்காது. விரோதங்கள் நிறைந்து நிற்கும். மனம் அமைதியாக இருக்காது. குடும்பத்தில் சந்தோஷங்கள் குறையும். சரும வியாதிகள் ஏற்படும்.

6-ஆவது வீட்டுக்குரிய கிரகம் 8-ல் இருந்தால் பொருட்களை விற்றுக் குடும்பம் நடத்துதலும், வருமானங்கள் இல்லாமலும் இருப்பார்கள். திருட்டுப்போதலும், வியாதிகளும், சண்டை சச்சரவுகளும், அவமானங்களும், ராஜதண்டனையும் ஏற்படும்.

6-ஆவது வீட்டுக்குரிய கிரகம் 9-ல் இருந்தால், பித்ரு, பாக்கிய சொத்துகள் விரயமாகும். பிறர் ஏமாற்றிவிடுவார்கள். நம்பிக்கை துரோகம் ஏற்படும். மனதில் நீதி, நேர்மை குறைந்து பாவகாரியங்களில் ஈடுபடுவார்கள். பெரியவர்களிடையேயும், சுற்றத்தார்களிடமும் விரோதம், இகழ்ச்சி ஏற்படும்.

6-ஆவது வீட்டுக்குரிய கிரகம் 10-ல் இருந்தால், அவர் சம்பாதிக்கும் வழியானது திருட்டுத்தனமாகவும், மோசம் செய்வதாகவும் இருக்கும். பிறர் பொருளையே நம்பியிருப்பார். வம்பு பேசியும், ஊர்சுற்றியும் குடும்பம் நடத்துவார்கள். சோம்பேறி, அயோக்கியன் என்று பெயரெடுப்பார்கள். வாழ்க்கை சுகமாக இருக்காது. எப்பொழுதும் மனதில் பயம் இருக்கும். ராஜதண்டனை, சிறைவாசம், மக்களின் அதிருப்தி உடையவராக இருப்பார். சுப பலமானால் அனைத்து பிரச்சினைகளிலும் லாபம் மற்றும் வெற்றி கொள்வார்கள்.

6-ஆவது வீட்டுக்குரிய கிரகம் 11-ல் இருந்தால் பெரிய லாபம் வராது. மூத்த சகோதரர் அல்லது சகோதரி வியாதியுடன் இருப்பார்கள். கடன்கள் அதிகமாகி கஷ்டங்கள் தொடரும். பாவ பலமானால்- பாவ விருத்தியினால் லாபம் உண்டாகும்.

6-ஆவது வீட்டுக்குரிய கிரகம் 12-ல் இருந்தால் எதிரிகளால் இடமாற்றம் அடிக்கடி நேரும். அகால போஜனமும், நித்திரைக்குறைவும், சயன சுகக்குறையும், அலைச்சலும் அதிகமாகும். அனாவசியமான செலவுகளும், வியாதிகளும், ஆண்குறியில் நோய்களும் ஏற்படும்.

மேற்கண்ட ஆறாம் வீட்டுத் தொல்லை களிலிருந்து விடுபட கீழ்க்கண்ட எளிய பரிகாரத்தைச் செய்துகொள்ள வேண்டும்.

பரிகாரம்-1

உங்கள் ஊர் அருகிலுள்ள லட்சுமி நரசிம் மரை வணங்கிவந்தால் வேண்டியது நடக்கும்.

ஏனென்றால் லட்சுமி நரசிம்மர் ஒருவரால் தான் கடன் தொந்தரவுகள் நீங்கும்.

பரிகாரம்-2

6-ல் புதன் இருந்தால் கடன் உபாதைகள் இருக்கும். எனவே அரை ஸ்பூன் வெந்தயம் எடுத்து வெள்ளைத்துணியில் முடிந்து வீட்டு நிலையிலும், பீரோ லாக்கரிலும் வைத்து வணங்கிவர, பணப்புழக்கம் அதிகரிக்கும்.

செல: 94871 68174